எனக்கு பிடித்ததில்...

அடுத்த நொடி...
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
யாரோ நிர்ணயிக்க போகும்
என் விதி...
வியர்வை மழையில் பய குடை
திசை அறியாமல் திகைக்கிறேன்..
மின்னலாய் உன் நினைவு
திடீரென ஒரு
சுயம் உணர்தல்..
என் வலி
உனக்கு புன்னகை வாங்கி தரலாம்..
நான் சமைத்த காயங்களுக்கு
மருந்தாகலாம்...
நினைவுக் காற்றில்
பயக் குடை பறந்தது..
இதோ அடுத்த நொடிக்காய்..
பிரார்த்திக்கிறேன்
உன் காயங்களுக்கு
மருந்து கிடைக்க...
-வந்திய தேவன்
0 Comments:
Post a Comment
<< Home