எப்போதும் என்னுடன்....

என் கரங்களில்
புதைந்து நீ
உறங்கிய அந்த இரவுகள்..
அதிகாலை வேளையில்
இப்போதும் அனிச்சையாய்
இடப் பக்கம் உன்னை தேடுகிறேன்..
என் கழுத்தில் மறைந்து
கண்ணாடி முன் நீ
அழகு பார்த்த அந்த நிமிடங்கள்..
புன்னகை பூக்கிறேன்..
என் முகம் பார்க்கும் ஒவ்வொரு முறையும்..
என் கவிதைகளுக்கு
பரிசாய் தருவாய்..
உன் இதழின் ஸ்பரிஸம்..
கணப் பொழுதில் தோன்றி மறையும் கவிதைகள்
இப்போதெல்லாம் அடிக்கடி சிலிர்க்கிறேன்..
அதெப்படி உனக்கு மட்டும்
தெரிகிறது
என் தனிமை..
உடனே வந்து
என் நினைவுகளை
ஆக்கிரமிக்கிறாய்.....
-வந்திய தேவன்
1 Comments:
This comment has been removed by the author.
Post a Comment
<< Home