09 January 2006

ஊடுதல் காமத்தி...













பிறக்காத குழந்தைக்கு
பெயர் வைப்பதில் தொடங்கும்..
நமக்கிடையேயான ஊடல்..

திசைக்கு ஒருவராய்
இருவரும் திரும்பி நிற்போம்..
மௌனத்தால் நம் அறைதனை
நிரப்பி அதில் சில
மணித்துளி கரைப்போம்...

உன் நீண்ட நேர மௌனம்..
'விட்டுக் கொடுத்தலை' எனக்கு உபதேசிக்கும்..
தோற்பதற்க்காய் திரும்ப
நினைக்கும் வேளையில்
காற்றாய் வந்து
என் காது கடிப்பாய்...
அடுத்து நீ செய்யப் போகும்
போருக்கான ஆயத்தமாய்...

வள்ளுவன் இருந்திருந்தால்
வாழ்த்தியிருப்பான் நம்மை...
அவன் படைப்பின்
கடைசி பக்கம்
காட்சியாவதை கண்டு..
                               -வந்திய தேவன்

4 Comments:

At 6:01 PM, Anonymous Anonymous சொல்வது...

Thirukural -llai puratta seithathu nanbanin intha puthu kavithai....

Thodarattum ......

 
At 10:43 PM, Blogger நண்பன் சொல்வது...

வாழ்த்துகள்.

கடைசியில் அந்த 'யாரோ'வைப் படித்ததும் சற்று ஏமாற்றமாகி விட்டது.

நீங்கள் எழுதவில்லையா?

என்றாலும் நல்ல தேர்வு!

இத்தகைய ரசனை மனமிருந்தாலே போதும் - சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பழகும் பொழுதே அத்தகையவற்றை எழுதுவதற்கும் ஒரு பயிற்சி கிடைத்து விடுகிறது.

தொடருங்கள்.

 
At 11:00 PM, Blogger Shahul Hameed P சொல்வது...

அன்பு நண்பனுக்கு,
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..
கவிதைகள் எழுத ஆரம்பித்து சில வருடங்கள் ஆனாலும், விமர்சனங்களுக்கு ஆட்படுத்துவது இதுவே முதல் முறை... எனக்கான ஒரு ஏதுவான தளத்திற்குள் (comfort zone) அமையும் வரை, என் பெயரிட வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.. என் அடுத்த படைப்பு நிச்சயம் என் பெயர் தாங்கியதாய் இருக்கும்.
நன்றி நண்பரே..

 
At 10:51 PM, Blogger Balloon MaMa சொல்வது...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

 

Post a Comment

<< Home