15 January 2006

வரம் வேண்டும்...















என் அதிகாலை பொழுது
உன் சமையலறை
சப்தங்களில் விடியும்...
புரண்டு படுப்பேன்..
என் போர்வைக்குள் மிச்சமிருக்கும்
உன் மூச்சுக்காற்றை
சுவாசித்துக்கொண்டு..

"எழுந்திருங்க குட்டி"
காதோரம் கிசுகிசுப்பாய்
உன் தேவதை மொழியில்...
இமைகளை திறக்காமல்
உன் கரம் பற்றி நான் இழுக்க...
விடுங்க என்று நீ சிணுங்க..
நாணத்தில் காதல்
கண் மூடிக் கொள்ளும்..

விவஸ்தை இல்லா
சமையலறை...
விசிலடித்து உனை அழைக்க
என் அறைக்குள்
உன் கூந்தல் மணம் நிரப்பி
காணாமல் போவாய்..

கடவுளுக்கு நெருங்கியவர்களே!
எனக்காக வாங்கி தாருங்கள்..
ஒரு நாளுக்கு
இரண்டு முறை
என் தேவதையால்
எழுப்பப்படும் வரம்...
                                                    -வந்திய தேவன்

2 Comments:

At 5:10 PM, Anonymous Anonymous சொல்வது...

miga arumai, excellent, romba nalla iruku

 
At 4:31 AM, Blogger சத்தியா சொல்வது...

அனுபவிச்சு எழுதி இருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<< Home