வரம் கேட்கும் தேவதை..
யாரோ ஒரு தலைவரின் கைது..
முடங்கிப் போகும் போக்குவரத்து...
தாமதமாய் வந்து கதவு தட்டுவேன்..
மௌனமாய் எனை அணைத்து
உன் கண்ணீரில் காதல் சொல்லுவாய்...
விருந்தினர் வந்ததை மறந்து,
ஒற்றைத் தட்டில் உணவெடுத்து வருவாய்..
நம் இருவருக்குமாய்..
சூழ்நிலை புரிந்ததும்
நாணத்தை இரைத்து விட்டு,
ஓடி மறைவாய்...

காலை முதல் உணவு தவிர்ப்பாய்..
காரணம் கேட்டால்
புன்னகையில் பதிலிருப்பாய்..
இரவில் தெரிந்து கொள்வேன்..
என் சென்ற வார காய்ச்சலுக்கான
உன் பிரார்த்தனை அதுவென்று..
சூரியன் சோம்பல் முறிக்கும்
காலைப் பொழுது..
வரங்களை கேட்கும்
தேவதையாய்...
என் மார்பில் தலை வைத்து..
மெல்லியதாய் கேட்கிறாய்;
"என்னை பிடிச்சிருக்கா?"
உனக்காய் தவமிருக்கும்
இந்த பக்தனை அறியாமல்...
- வந்தியத் தேவன்.
9 Comments:
Cool as well as nice!
ungal kunthavai piratti intha kavithai padithu vittu enna solkirar?
ungal kunthavai piratti intha kavithai padithu vittu enna solkirar?
Good one !!
ஆரம்பம் பிறை என்றாலும்
அற்புதமாய் முழுமை அடையும்
பௌர்ணமி நிலவின் அழகு!
அந்நிலவொளியில்
செருக்குடன் தகதகவென மின்னிடும்
கடல் அலையின் அழகு!
ஆங்காங்கே
இறைவன் வரையாமல் மறந்து விட்ட
கோல புள்ளிகளாய்
பொலிவுடன் மிளிரும் வின்மீணின் அழகு!
ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில்
இறைவனின் கவிதைகள் நாம் ரசிக்க!
உயிரோட்டமுள்ள உனது படைப்புகளும் அப்படியே!
அடிகோடிட பட்ட பாரதியின் வரிகளும்
சுட்டி காட்டப் பட்ட வள்ளுவனின் வரிகளும்
இன்னும் அதிகமாய்
தமிழை நேசிக்கவும் வாசிக்கவும் செய்தது!
Selva and siddarth.. Thanks a lot.. and keep visiting :)
@Geetha : Kunthavai piraattiyaar oru periya punnagaiyudan nirutthi kondaar :)
@Anony..
Thanks a lot.. In fact, ur comment is better than my kavithai :). keep visiting..
தோழரே!
இயல்பான உங்க கவிதைளை பார்த்து
ரொம்ப உணர்ச்சி வசப்பட்டதின்
வினைப்பயன் தான்
என்னோட அந்த comment!
எனினும் மிக்க நன்றி!
Its long time since we had something new from you...
Waiting for something new and good, as always...
Kangalai kalanga vaikkum kavidhai.. Wonderful!!
Post a Comment
<< Home