இந்த பக்தனுக்கு..
பெண்களை கடந்தவன் என்ற
என் கர்வம் துடைத்தவள் நீ..
மறந்து போன கனவுகளை..
மீண்டும் மலர வைத்தவள்...
வலி மறந்த இந்த விழிகளை ,
இரவு முழுவதும் அழ வைத்தவள்...
உன்னை நிந்திப்பதா..
இல்லை.. நொடிக்கு இரு முறை சிந்திப்பதா?
உயிர் ஓடும் மரணப் படுக்கையில்.
உன் விழி காணும் வரம் கொடு...
உன் பெயர் கூறி தவம் இருக்கும்
இந்த பக்தனுக்கு..